காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-26 13:41 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சென்னசமுத்திரம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த மார்கண்டன் மகன் விஜயகுமார் (வயது 25). இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு மாணவி மறுத்ததால் விஜயகுமார் தான் வைத்திருந்த கத்தியல், மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகையமடைந்த மாணவி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருறார்.

இதுகுறித்து கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து விஜயகுமாரை தேடிவந்தனர். இந்த நிலையில் புதுப்பாடி கேட் அருகே நள்ளிரவில் விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

மாணவி என்னை காதலித்து வந்தார். பிறகு அவர் பெற்றோர் கூறியதால் என்னை காதலிக்க மறுத்து விட்டார். என்னால் அவரை மறக்க முடியவில்லை. அதனால் கழுத்தை அறுத்தேன் என்று விஜயகுமார் போலீசில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்