புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபர் கைது

புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-24 18:31 GMT

கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கீரனூர்-கிள்ளுக்கோட்டை சாலையில் மளிகை கடை நடத்தி வரும் பிரபு முருகானந்தம் (வயது 35) என்பவர் கடையில் சோதனை செய்தனர். அதில் அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் பிரபு முருகானந்தத்தை கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்