கர்நாடகா மாநில பாக்கெட் மது விற்ற வாலிபர் கைது

ஜோலார்பேட்டையில் கர்நாடகா மாநில பாக்கெட் மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-09-26 17:41 GMT

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பால்னாங்குப்பம் பகுதியில் கர்நாடக மாநில பாக்கெட் மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அங்கு பால்னாங்குப்பம் புதூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் இளவரசன் (வயது 29) என்பவர் தனது வீட்டின் பின்புறம் கர்நாடக மாநில 384 மது பாக்கெட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து கர்நாடக மாநில 384 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்