கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபரை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2023-06-25 21:48 GMT

பெருந்துறை

பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பெருந்துறையில் உள்ள சென்னிமலை ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது பெரிய வேட்டுபாளையம் பிரிவு அருகே சென்றபோது சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 'அவர் சிவகிரி அருகே வாழைத்தோட்டம் மாரங்காட்டூரை சேர்ந்த வேலுச்சாமி மகன் ராஜேஷ்குமார் (வயது 25) என்பதும், அவர் பெரிய வேட்டுபாளையம் பிரிவு பகுதியில் கஞ்சா விற்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜேஷ்குமாரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் அளவிலான கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்