ஐஐடி வளாகத்தில் மாணவியிடம் அத்துமீறல் - இளைஞர் கைது

ஐஐடி வளாகத்தில் மாணவியிடம் அத்துமீறிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-11-14 18:53 IST

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், வளாகத்தில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி, வளாகத்தில் இருந்த காவலாளியிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த இளைஞர் ஏற்கனவே ஐ.ஐ.டியில் பெயிண்டராக பணிபரிந்த வசந்த் எட்வர்ட் என்பது தெரியவந்தது. போதையில் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தது தெரியவந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்