பூதப்பாண்டியில் நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

பூதப்பாண்டியில் நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-11 20:36 GMT

நாகர்கோவில், 

பூதப்பாண்டியில் நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பலாத்காரம்

பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி நர்சிங் படித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள அனைத்த மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் 8-ம் வகுப்பு படிக்கும்போதே அழகியபாண்டியபுரம் நன்றிகுழி பகுதியைச் சேர்ந்த தனேஷ் (வயது 20) என்பவர் என்னை பின்தொடர்ந்து வந்து காதலிப்பதாக கூறினார். பின்னர் நான் நெல்லையில் படித்துக் கொண்டிருந்தேன். தனேஷ் விபத்தில் சிக்கி வீட்டில் இருந்து வந்தார். இதை அறிந்த நான்அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தேன். அப்போது தனேஷ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்தனர். மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார், தனேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்