ஊட்டியில் சிறுமியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வாலிபர் கைது

போக்சோவில் கைதான வாலிபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2023-04-13 18:45 GMT

ஊட்டி

போக்சோவில் கைதான வாலிபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டார்.

16 வயது சிறுமி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ (வயது 22). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2022-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஊட்டிக்கு அழைத்து வந்து தனியார் ஓட்டலில் தங்கினார். மேலும் அந்த சிறுமிக்கு அங்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஸ்ரீ கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவருக்கு கோர்ட்டுக்கு ஜாமீன் வழங்கியது.

சிறையில் அடைப்பு

இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த ஸ்ரீ, பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து உள்ளார். இதைப் பார்த்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் ஊட்டி மகிளா கோர்ட்டில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணையின் போது சிறுமி நேரில் ஆஜராகி, இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து வாக்குமூலம் அளித்தார்.

இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி நாராயணன், அந்த வாலிபரின் ஜாமீனை ரத்து செய்ததுடன் மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, அந்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்