பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா திருப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீதாராமன். அவரது மகன் பெருமாள் என்கிற பாபு (வயது 28). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, பாபுவை கைது செய்தனர்.