சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கையை அடுத்த கோமாளிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 24). இவர் பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதில் அந்த சிறுமி 7 மாத கர்ப்பமானார். இதற்கிடைேய கருப்பசாமி கடந்த மாதம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தார்.