சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
தியாகதுருகம் அருகே கொங்கராயபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் சந்தோஷ் (வயது 21). இவர் 17 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானாள். இதையடுத்து அந்த சிறுமி சந்தோசிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளாள். இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் சிறுமியை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.