பள்ளி மாணவியை திருமணத்திற்கு வற்புறுத்திய வாலிபர் கைது

கண்டாச்சிபுரம் அருகே பள்ளி மாணவியை திருமணத்திற்கு வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-06 18:45 GMT

திருக்கோவிலூர், 

விழுப்புரம் அருகே காரணை கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் வீரமணி (வயது 19). அரசு கல்லூரி ஒன்றில் பி.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 படித்து வரும் மாணவியின் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் அவர் அந்த மாணவியிடம், திருமண ஆசைக்காட்டி நாம் எங்காவது ஓடிப்போகலாம் என கூறி கையை பிடித்து இழுத்ததாக தெரிகிறது. இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த மாணவியை மீட்டனர். இது குறித்து பள்ளி மாணவியின் தாய் கண்டாச்சிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வீரமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்