அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது;
திருத்துறைப்பூண்டி திருவாசல் தெருவை சேர்ந்தவர் தேவிசீராளன் (வயது49). இவர் ரொக்க குத்தகை பைபாஸ் ரோடு ரவுண்டானா அருகில் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மேலமருதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரவீன் (22) என்பவர் தேவி சீராளனை அரிவாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.200 பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தேவிசீராளன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.