தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-24 18:46 GMT

கரூர் வடகம்பாடியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 46). தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தர்மபுரியை சேர்ந்த கோபால் (35) என்பவர், மணிவேலிடம் நைசாக பேச்சு கொடுத்து, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.500-ஐ பறித்துள்ளார். இதுகுறித்து மணிவேல் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து, கோபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்