சேலத்தில் தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறித்த வாலிபர் கைது
சேலத்தில் தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 40), கூலித்தொழிலாளி. இவர் நேற்று புத்துமாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக செங்கல் அணை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவர் வந்தார்.
பின்னர் அவர் கத்தியை காட்டி மிரட்டி மாணிக்கத்திடம் இருந்து ரூ.1,200 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சதீஷ்குமாரை கைது செய்தனர்.