பார் ஊழியரிடம் பணம் முயன்ற வாலிபர் கைது

பார் ஊழியரிடம் பணம் முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-04-05 19:11 GMT

ராமநாதபுரம் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் ஜோதி (வயது 33). இவர் தாந்தோணிமலையில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஜோதி பணியை முடித்து கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, தாந்தோணிமலையை சேர்ந்த முகமது அன்சாரி (19) என்பவர் ஜோதிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து, முகமது அன்சாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்