அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

திருக்கோவிலூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-01 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கடுவனூரை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்ற கொண்டிருந்தது. கரடி கிராம பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிய பின்னர் பஸ் மீண்டும் அங்கிருந்து புறப்பட தயாரானது. அப்போது யாரோ மர்ம நபர் பஸ்சின் பின்பக்கம் கல்வீசி கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டு டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் கண்டக்டர் ஹரி கிருஷ்ணன் பஸ்சில் இருந்து இறங்கி பின்பக்கம் போய் பார்த்தார். அப்போது பஸ்மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

பின்னர் இது குறித்து பஸ் கண்டக்டர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி குரூஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விசாரணை நடத்தினார். விசாரணையில் பஸ் கண்ணாடியை உடைத்தவர் கரடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் குரு(வயது 29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து  பஸ் கண்ணாடியை உடைத்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்