நில அளவை பணி செய்யவிடாமல் தடுத்த வாலிபர் கைது
நில அளவை பணி செய்யவிடாமல் தடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வையம்பட்டி:
வையம்பட்டி பகுதி நில அளவையராக பக்ருதீன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று இவர் அரசமரத்துபட்டி என்ற ஊரில் கே.புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளருடன் நில அளவை பணிக்கு சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(வயது 21) என்பவர், நில அளவை பணியை செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வையம்பட்டி போலீசில் நில அளவையர் பக்ருதீன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று பெரியசாமியை கைது செய்தனர்.