பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் பெண்ணை தாக்கிய வாலிபைர போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையம் தெற்கு புறவழிச்சாலையில் சேர்மதுரை (வயது 30) என்பவர் ஒருவருடன் தகராறு செய்து கொண்டிருந்தார். அப்போது அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவர், தகராறை நிறுத்தி சமதானாப்படுத்தி உள்ளார். இந்த நிலையில் சேர்மதுரையின் செல்போன் காணாமல் போய் விட்டது. அதனை அய்யப்பன் எடுத்து சென்றிருக்கலாம் என சேர்மதுரை கருதினார். இதையடுத்து சேர்மதுரை, அய்யப்பன் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த அவருடைய மனைவி அனிதாவை (25) தகாத வார்த்தையால் பேசி, செங்கலால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபினேசர் வழக்குப்பதிவு செய்து சேர்மதுரையை கைது செய்தார்.