தூய்மை பணியாளரை தாக்கிய வாலிபர் கைது

தூய்மை பணியாளரை தாக்கிய வாலிபர் கைது

Update: 2023-05-20 18:45 GMT

கோவை

கோவை வெரைட்டிஹால் ரோடு சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவர் மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி மதுரை வீரன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (23) என்பவர் பொதுமக்களிடம் குடிபோதையில் தகராறு செய்தார்.

இதனை முத்துக்குமார் கண்டித்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன் தகாத வார்தைகளால் பேசி முத்துக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலகிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்