மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வாலிபர் கைது

நெமிலியில் மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்படார்.

Update: 2023-08-16 19:16 GMT

நெமிலி போலீஸ் நிலையம் அருகே உள்ள நடேச ரெட்டி தெருவில் வசித்து வருபவர் பவானி (வயது 61). தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் பவானியை தாக்கி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றார்.

இது தொடர்பாக நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கொள்ளையடித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக நெமிலி காட்டுநாயக்கன் தெருவில் வசிக்கும் லோகநாதன் என்பவரின் மகன் தணிகைவேல் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்