மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது

மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது;

Update: 2022-07-06 20:04 GMT

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கண்டமங்கலம் மெயின் சாலையில் வசித்து வருபவர் தங்கம் (வயது60). இவரது வீட்டிற்குள் கண்டமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இலக்கியராஜ் (23) என்பவர் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி, மூதாட்டியை தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் தங்கம் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை தாக்கிய இலக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்