மாமியாரை தாக்கிய வாலிபர் கைது
பெரியகுளம் அருகே மாமியாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியை சேர்ந்த கண்ணன் மனைவி போக மணி (வயது 45). இவரது மகள் காவியாவுக்கும், அதே ஊரை சேர்ந்த பெருமாள் (35) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் பெருமாள், மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காவியா கோபித்துக்கொண்டு தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஆத்திரமடைந்த பெருமாள் மாமனார் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாமியார் போகமணியை பெருமாள் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கண்ணன் பெரியகுளம் போலீசில் புகார் செய்தாா். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.