அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-03 18:45 GMT

விளாத்திகுளத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலையில் வந்தது. இதில் கண்டக்டராக வைப்பார் தல்லாகுளத்தைச் சேர்ந்த கதிர்வேல் (வயது 36) என்பவர் இருந்தார்.

புதிய பஸ் நிலையத்தில் பயணிகளை பஸ்சில் ஏற்றுவது தொடர்பாக அங்கே நின்றிருந்த மடத்தூர் முருகேசன் நகரைச் சேர்ந்த ரீகன் (33) என்பவருக்கும், கதிர்வேலுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரீகன், கதிர்வேலை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் கதிர்வேல் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்