மாமனாரை தாக்கிய வாலிபர் கைது
பட்டிவீரன்பட்டி அருகே மாமானாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பட்டிவீரன்பட்டி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 55). இவரது மருமகன் ஜோசப் கிளிண்டன் (27). இவர்களுக்குள் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பட்டிவீரன்பட்டி அண்ணா நகரில் பெருமாள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜோசப் கிளிண்டன் அவரிடம் தகராறு செய்தார். பின்னர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பெருமாளை ஜோசப் கிளிண்டன் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசில் பெருமாள் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப் கிளிண்டனை கைது செய்தனர்.