வாகன சோதனையில் ஈடுபட்ட ஏட்டுவை தாக்கிய வாலிபர் கைது

வாகன சோதனையில் ஈடுபட்ட ஏட்டுவை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-31 19:31 GMT

ராஜபாளையம், 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர், காந்தரூபன் (வயது 32). இவர் ராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். சங்கரன்கோவில் சாலை முக்கு பகுதியில் காந்தரூபன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஒரு வாலிபர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். அப்போது அந்த வாலிபருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் போக்குவரத்து போலீசாரை அவதூறாக பேசியதுடன் காந்தரூபனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்த பிரித்விராஜ் (26) என்பதும், எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்