குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
கும்பகோணம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யபபட்டார்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா ராமானுஜபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடை ய மகன் கவி என்ற கவியரசன் (வயது 28). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கவியரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சர்மிளா, குண்டர் சட்டத்தில் கவியரசனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.