திருவாரூரில், நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க முதல் நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்

திருவாரூரில் நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க முதல் நாளிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

Update: 2022-07-04 18:10 GMT

திருவாரூரில் நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க முதல் நாளிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

பருவகால பணிகள்

திருவாரூர் மாவட்ட நுகர் பொருள் வாணிபக்கழகத்தின் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்காலிக பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு 152 பணியிடங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலைய உதவுபவர் பணிக்கு 147 பணியிடங்கள், பாதுகாவலர் பணிக்கு 351 பணிடங்கள் என மொத்தம் 650 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான விண்ணப்பங்களை வாங்கும் பணி முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

அதன்படி திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் பருவகால பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முதல் நாளிலேயே குவிந்தனர்.

பெண்களும் விண்ணப்பிக்கலாம்

இதில் பட்டியல் எழுத்தர் பணிக்கு பட்ட படிப்பு, உதவியாளர் பணிக்கு 12-ம் வகுப்பு, பாதுகாவலர் பணிக்கு 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஏராளமான பட்டதாரிகள், பொறியியல் படித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க வந்திருந்தனர்.

குறிப்பாக இந்த பணிக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்க வந்திருந்தனர். இந்த பருவகால பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும்.

Tags:    

மேலும் செய்திகள்