இளம் பெண் மாயம்

இளம் பெண் மாயமானார்.

Update: 2023-04-17 18:31 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூர் ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி வினோதா (வயது 20). அய்யாசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோதா கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் வினோதா கிடைக்காததால் வினோதாவின் தாத்தா அய்யாக்குட்டி கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வினோதாவை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்