இளம் பெண் மாயம்

பண்ருட்டியில் இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2023-09-09 18:45 GMT

பண்ருட்டி, செப்.10-

பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 20 வயது பெண் சம்பவத்தன்று இரவு அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். பின்னர் மறுநாள் காலையில் அவரது பெற்றோர் எழுந்து பார்த்தபோது அந்த பெண்ணை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அந்த பெண்ணை காணாததால் இதுபற்றி பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்