திருமணமான 2 வாரத்தில் இளம் பெண் மாயம்

திருமணமான 2 வாரத்தில் இளம் பெண் மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-13 18:34 GMT

திருநாவலூர், 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் பகுதியை சேர்ந்தவர் 20 வயதுடைய இளம் பெண். இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 வாரங்கள் ஆகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற இளம் பெண் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ,மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர். திருமணமான 2 வாரத்தில் இளம் பெண் மாயமாகி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்