இளம் பெண் மர்ம சாவு
வத்திராயிருப்பு அருகே இளம் பெண் மர்மமான முறையில் இறந்தார்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் அத்திகோவில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வனராஜ் (வயது50). இவரது மனைவி உமா (26). இவர்கள் அத்திகோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒருவரது தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் வனராஜ் மற்றும் அவரது மனைவியும் தூங்கி கொண்டு இருந்தனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது உமா உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து வனராஜ் கூமாபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை சூப்பிரண்டு சபரிநாதன், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.