விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை

திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை போலீசார் விசாரணை

Update: 2022-12-28 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கரடி கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை மகள் பார்வதி(வயது 18). இவர் சம்பவத்தன்று அதே ஊரில் உள்ள காட்டில் ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்தபோது திடீரென வாந்தி எடுத்தார். இதுபற்றி வீட்டில் உள்ளவர்கள் கேட்டபோது குவளைகொட்டை என்னும் விஷக்கொட்டையை அரைத்து குடித்து விட்டதாக பார்வதி கூறினார். உடனே அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இருந்தார். இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்வதியின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்