நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

கூடங்குளத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-06-14 20:02 GMT

கூடங்குளம்:

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கரன்சிங் ஜாம்ரா மகன் அஜீஸ் (வயது 23). இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எக்ஸ்கியூடிவ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் செட்டிகுளம் டவுன்ஷிப் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அஜீஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்