நாகூர் தர்கா குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

நாகூர் தர்கா குளத்தில் தவறி விழுந்த செல்போனை எடுக்க முயன்ற போது குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-06-19 16:43 GMT

நாகூர்:

நாகூர் தர்கா குளத்தில் தவறி விழுந்த செல்போனை எடுக்க முயன்ற போது குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தவறி விழுந்த செல்போன்

கடலூர் மாவட்டம் வன்னியர்பாளைம் கல்லரை தெருவை சேர்ந்தவர் ஹாஜி முகமது. இவருடைய மகன் ஜெகபர் சாதிக் (வயது32). இவர் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் நாகூரில் உள்ள தர்காவிற்கு வந்துள்ளார். .பின்னர் அவர், தர்கா குளம் அருகில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெகபர் சாதிக் தர்கா குளம் சுவரில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது செல்போன் தவறி குளத்தில் விழுந்து உள்ளது.

குளத்தில் மூழ்கி சாவு

இதை தொடர்ந்து செல்போனை எடுக்க ஜெகபர் சாதிக், குளத்தில் இறங்கிய போது அவர் தண்ணீர் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் இருந்து ஜெகபர் சாதிக் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்