விபத்தில் வாலிபர் சாவு

சிங்கம்புணரியில் நடந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-21 18:41 GMT

சிங்கம்புணரி,

சிதம்பரம் அருகே ஆயக்குடியை சேர்ந்த குமார் மகன் கார்த்திக்(வயது 22). இவர் தனது பெரியம்மாவை பார்ப்பதற்காக சிங்கம்புணரி அருகே ஓடுவன்பட்டிக்கு வந்திருந்தார். இங்கு அவரும், உறவினர் அருண்குமாரும்(28) ேமாட்டார் சைக்கிளில் சிங்கம்புணரிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டினார். பின்னால் அருண்குமார் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அணைக்கரைப்பட்டி பாலத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் இறந்தார்.தலையில் காயம் ஏற்பட்ட அருண்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்