பெண் என்ஜினீயரை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

பெண் என்ஜினீயரை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-11 21:01 GMT

லால்குடி:

லால்குடியை அடுத்த முத்திரியூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சுரேஷ்(வயது 36). இவரும், 26 வயதுடைய என்ஜினீயரான ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக சுரேஷ் ஆசை வார்த்தைகள் கூறி, அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். இந்நிலையில் இது குறித்து இருவரது வீட்டிற்கும் தெரிய வந்தநிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்ய சுரேஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் லால்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்