இளம்பெண் தற்கொலை

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-10-08 04:30 IST

திண்டுக்கல் அருகே எம்.எம்.கோவிலூர் மொண்டியபட்டியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 22). இவர்கள் 2 பேரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பச்சையம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பச்சையம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பச்சையம்மாளுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்