தஞ்சையில் கொரோனாவுக்கு இளம்பெண் பலி..! எந்த வகை வைரஸ் எனக்கண்டறிய ஆய்வகத்திற்கு மாதிரி அனுப்பி வைப்பு

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு தஞ்சாவூரில் 18 வயது இளம் பெண் உயிரிழந்தார்.

Update: 2022-06-16 05:22 GMT

சென்னை,

தமிழகத்தில் நேற்று 14 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 257 பேரும், பெண்கள் 219 பேரும் உள்பட 476 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகாத நிலையில், நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் கொரோனாவுக்கு உயிரிழந்தார். இவருக்கு எந்தவித இணைநோயும் இல்லாத நிலையில், அவர் உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு கும்பகோனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்த இளம்பெண் எந்த வகையான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பதை கண்டறிய அவரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரி சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்