தீக்குளித்து இளம்பெண் தற்கொலை
பழனியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பழனி ராமர்கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. கூலித்தொழிலாளி. இவரது மகள் சுகன்யா (வயது 20). இவர் பழனியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். உடல்நிலை பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக அவர் வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று குடும்பத்தினர் வெளியே சென்றநிலையில், வீட்டில் தனியாக இருந்த சுகன்யா மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த சுகன்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகன்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.