தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

வருசநாடு அருகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-23 18:45 GMT

வருசநாடு அருகே வண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி ரஞ்சிதா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக ரஞ்சிதா வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.

இந்நிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது ரஞ்சிதா தன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் வலியால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்