இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மேல்விஷாரம் அருகே இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-08-08 17:57 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் கிரேன்குமார். இவர் மேல்விஷாரத்தை அடுத்த தென்நந்தியாலம் பகுதியைச் சேர்ந்த காவியா (வயது 23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கிரேன் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் காவியா தென்நந்தியாலத்தில் உள்ள தாய் சாந்தி வீட்டில் இருந்து வந்துள்ளார். சாந்தி மேல்விஷாரம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது காவியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்