இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
பணகுடியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பணகுடி:
பணகுடி சிவகாமிபுரம் காந்தி மேலதெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 34), லோடு ஆட்டோ ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பேச்சித்தாய் (25). கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பேச்சித்தாய் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ெசல்லும் வழியிலேயே பேச்சித்தாய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ் குமார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.