இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்;

Update: 2022-11-03 10:46 GMT

திருப்பூர்

தமிழ்நாடு அரசு மாநில அளவில் கைத்தறியில் சிறந்த இளம் வடிமைப்பாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது. அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வடிவமைப்பாளர்களில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்த விருதுக்கான வழிகாட்டுதல்கள், வடிவமைப்பு நுழைவுப்படிவம், தகுதிகள், தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் வடிவமைப்பை www.loomworld.in என்ற இணையதளத்தில் காணலாம்.

ஆர்வமுள்ளவர்கள் வருகிற 6-ந் தேதிக்குள், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண்.507, 5-வது தளத்தில் உள்ள திருப்பூர் கைத்தறித்துறை, உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

----

Tags:    

மேலும் செய்திகள்