இணையவழி மூலம் மோசடி குறித்து புகார் தெரிவிக்கலாம்
இணையவழி மூலம் மோசடி குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் அனுப்பி வைக்க கூறினாலோ, பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், ஆன்லைன் ரம்மி, லோன் ஆப் போன்றவற்றில் ஆசை வார்த்தைகளை கூறினாலும், அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மேலும் இணையவழி மூலம் பண மோசடி புகார்களுக்கு பொதுமக்கள் 24 மணி நேரத்திற்குள் "1930" என்ற இலவச அழைப்பு எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கவும். சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடவும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.