ரேஷன்அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்கலாம்

ரேஷன்அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்கலாம்

Update: 2023-02-19 19:51 GMT

இலவச தொலைபேசி எண் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்கலாம் என உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சை உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலவச தொலைபேசி எண்

தமிழக அரசு, ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன்அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது. இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி, கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். இவர்கள் பற்றியும், ரேஷன் பொருட்கள் பதுக்கல் குறித்தும் பொதுமக்கள், 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறை

இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் டி.ஜி.பி.யின் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்