தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயத்த ஆடையகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயத்த ஆடையகம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-27 13:29 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவு அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஆயத்த ஆடையகம்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப 10 பேரை கொண்டு ஒரு குழுவாக அமைத்து ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவு (ரெடிமேடு) புதிதாக ஏற்படுத்த அரசு ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவு அமைக்க 10 பேர் குழு அமைக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சிபெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் உள்ள குழுவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

புதிய ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் தொடங்க ஆர்வமாக உள்ள முன் அனுபவம் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மக்கள், குழுவாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு வருகிற 1-ந் தேதிக்குள் உரிய விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 19.9.22-க்குள் மேற்கண்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்