31-ந்தேதி வரை சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தொலைநெறி தொடர்கல்வியில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் 31-ந்தேதி வரை சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2023-05-07 19:35 GMT

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி வழியாக இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பில் சேர்ந்து பயின்று தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சிறப்பு தேர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பாக பல்கலைக்கழக இணையதளத்தில் (www.msuniv.ac.in) கடந்த 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது பதிவேற்றம் செய்ய வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்திலோ, அல்லது 0462-2338521, 9381242836 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்