முதலாம் ஆண்டு இளநிலை படிப்பில் சேர 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை படிப்பில் சேர 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்

Update: 2023-08-22 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 2023 -2024-ம் கல்வி ஆண்டில் இளநிலை பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு மாணவ சேர்க்கை வருகிற 31-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் உள்ள காலிஇடங்களுக்கு உரிய விதிமுறைகளின் படி தகுதியான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதுவரை இணைய வழியில் விண்ணப்பிக்காத மாணவர்களும் கல்லூரியில் புதிய விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.

எனவே இந்த கல்லூரியில் சேர விரும்பும் பிளஸ்-2 முடித்த மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். சேர்க்கைக்கு வரும் மாணவ-மாணவிகள், பிளஸ்-2 மாற்றுச் சான்றிதழ் ஜாதி சான்றிதழ் 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவைகளின் அசல் மற்றும் புகைப்பட நகல்களை கொண்டு வர வேண்டும் அத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களும் கொண்டு வர வேண்டும் எனவே கல்லூரியில் இளநிலை பாட வகுப்பில் முதலாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்