முக்கூடல்:
முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 'மனித குலத்திற்கான யோகா' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர் மற்றும் இயக்குனர் ஆறுமுகம் யோகாவின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். கல்லூரி செயலாளர் ஆறுமுகசாமி தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணவேணி வரவேற்றார். யோகா சுடர் மகாலட்சுமி, சுதா ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். உடற்கல்வித்துறை பேராசிரியை சில்வியா நன்றி கூறினார்.