பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம்

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2023-06-21 19:15 GMT

சர்வதேச யோகா தின விழா

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. அதன்படி, தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த விழாவுக்கு கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் செல்வக்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் வாழ்த்தி பேசினார்.

அதைத்தொடர்ந்து நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லூரி முதல்வர் சித்ரா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இந்த இரு கல்லூரிகளிலும் நடந்த விழாக்களில் தேனி மனவளக்கலை மன்ற பேராசிரியை அண்ணாமலைத்தாய், துணை பேராசிரியை ரேணுகாதேவி ஆகியோர் கலந்துகொண்டு யோகா பயிற்சி அளித்தனர். மாணவ, மாணவிகள் யோகா பயிற்சிகள் செய்தனர்.

சரசுவதி பப்ளிக் பள்ளி

தேனி நாடார் சரசுவதி பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி, பள்ளி மைதானத்தில் மாணவ, மாணவிகள் யோகா சின்னம் வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழாவில் உறவின்முறை நிர்வாகிகள், பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு யோகா பயிற்சி

தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம், தேனி அறிவு திருக்கோவில் வாழும் கலை மையம் ஆகியவை சார்பில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. அரசு டாக்டர் கண்ணன் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சிகள் குறித்து பேசினார். பின்னர் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சியாளர் திருநாவுக்கரசு யோகா பயிற்சி அளித்தார்.

விழாவில் தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள், பொதுச்செயலாளர் பொன்னுச்சாமி, கல்லூரி செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் விஜயன், பொருளாளர் தாமரைக்கண்ணன், கல்லூரி முதல்வர் தர்மலிங்கம், வாழும் கலை மையத்தின் பயிற்சியாளர்கள், நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வக்குமார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

ஆண்டிப்பட்டி

ஆண்டிப்பட்டியில் டைமன் வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளி தாளாளர் டைமன் பாண்டி செல்வன் தலைமை தாங்கினார்.

விழாவில் பயிற்சியாளர் பிராணிக் ஹீலர் பாரதி மாணவர்களுக்கு கல்வி திறனை வளர்ப்பதற்கு சூப்பர் பிரைன் யோகா பயிற்சி அளித்தார். மேலும் உலக நன்மை கருதி ஸ்பைரல் மெடிடேசன் (சுழல் தியானம்) மாணவர்களுக்கு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் வீரலட்சுமி ராஜவேல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்